புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில், புஸ்ஸி வீதி, இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சித்தன்குடி, வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வீடுகளைச் சூழ்ந்தது.
தொடர் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால், புதுச்சேரி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.