ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க மற்றும் பி.டி.பி, தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் 2ஆவது நாளாக கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம் என்று உமர் அப்துல்லா தலைமையிலான கூட்டணி அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதித்ரப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தீர்மானத்திற்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் சிலர் 370ஆவது சட்டப்பிரிவு தொடர்பான பதாகையை சட்டசபையில் காட்டியபோது நேற்று கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் பா.ஜ.க மற்றும் பி.டி.பி, தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் மோதிக்கொண்டனர்.
அவைக்காவலர்கள் விலக்கிவிட்டும் எம்.எல்.ஏக்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.