நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூராய்வு செய்யும் இடங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் செல்ல வேண்டாம் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இறந்த விலங்குகளின் சடலங்களை சரியான முறையில் புதைக்க வேண்டும் எனவும், மீட்பு பணியில் உள்ள மீட்புக் குழுவினர் டாக்ஸி ப்ரொபைலாக்சிஸ் என்ற நோய்தடுப்பு மாத்திரையை உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.