டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில், செல்போன்கள் மூலமான பணப் பரிவர்த்தனையால் இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குத் திட்ட நடவடிக்கையால் கிடைத்த பலன் என்றும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் சேவைகளின் வளர்ச்சியால், கிராமப்பகுதி மக்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலம் நேரடி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா.வின் பொது அவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்தியாவைப் போல், பிற நாடுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வறுமையில் இருந்து மக்களை மீட்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.