3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னை, பிரதமர் மோடி கட்டிதழுவி வரவேற்றார்.
இருநாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், விவசாய ஆராய்ச்சி, கல்வி, கடல்சார் பாரம்பரியம், மூலிகை ஆராய்ச்சி மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக பேட்டியளித்த நிலையில், இந்தியா, வியட்நாம் இடையே கடந்த 10 ஆண்டுகளில் உறவு வலுவடைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.