பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் குனியில் கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1979-ஆம் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, முதலமைச்சர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த கைலாசநாதன் 2013-ல் ஓய்வு பெற்றார். பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை முதன்மைச் செயலர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் வரை பதவியில் நீடித்தார்.
71 வயதான கைலாசநாதன் கேரளாவின் வடகராவில் பிறந்து, ஊட்டியில் வளர்ந்தவர். சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் வேல்ஸ் பல்கலைக் கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். குஜராத்தில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.