பீகாரில் இரண்டே வாரங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.
சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிறிய பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இதனால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்ததால், பாலங்களின் உறுதித்தன்மையை ஆராய 2 பேர் குழுவை அமைத்து முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பாலத்தில் கூடுதல் எடை ஏற்றுவது, மோசமான பராமரிப்பு, வாழ்நாளைத் தாண்டிய பயன்பாடு, தவறான வடிவமைப்பு, வெள்ளத்தால் அரிப்பு, தவறான பொருத்துதல், உலோக பாகங்கள் துருப்பிடித்தல் மற்றும் அரித்துப் போவது ஆகியவை பாலங்கள் இடிந்து விழ முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.