ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களை நடைமுறைப்படுத்த காவல்துறை, சிறைத்துறை, தடயவியல் துறை நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் சுமார் 5 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள் குடிமக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு அமைச்சகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பதிவுகளில் 40 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.