கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கதிரூரில் சாலையோர உணவகத்தில் உணவருந்த வந்தவர், பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தும்போது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் உணவகத்தின் படிக்கட்டில் ஏறி கண்ணாடி கதவுகளின் மீது மோதி நின்றது.
வாகனங்களை முறைப்படுத்திக் கொண்டிருந்த உணவகத்தின் காவலர் உடனடியாக விலகிச் சென்றதால் காயங்களின்றி தப்பினார்.