குறிப்பிட்ட இலாக்காக்களை பெறுவதில் தெலுங்கு தேசம், ஜே.டி.யூ. ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டும் நிலையில், முக்கியப் பொறுப்புகளை தங்கள் வசமே வைத்துக்கொள்ளும் முடிவில் பா.ஜ.க. உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரக, நகர வளர்ச்சித்துறை, கப்பல், துறைமுகம், நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட இலாக்காக்களை தங்கள் தரப்பிற்கு ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
அதேபோல், பாதுகாப்பு, ரயில்வே, வேளாண்துறை உள்பட முக்கியத்துவம் வந்த இலாக்காக்களை ஒதுக்குமாறு நிதிஷ்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.