பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தலைவராக ஜே.பி.நட்டா உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேச முதல்வராகப் பதவி வகித்த சவுகான், மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் 8 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பியாகியுள்ளார்.
மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக உள்ள அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தார். 2019 முதல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக சவுகான் உள்ளார்.