இந்திய தேர்தல்களில் இஸ்ரேலிய நெட்வொர்க் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரசுக்கு ஆதரவாகவும் தகவல்களை பரப்பத் தொடங்கியது தெரிய வந்து மே மாதத்தில் அதை தடுத்து விட்டதாகவும் OpenAI அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த அரசியல் பரப்புரை நிர்வாக நிறுவனமான ஸ்டோயிக் மூலம் ஆங்கிலத்தில் வெளியிட்ட தகவல்களால் மக்களின் கருத்தை திசைதிருப்ப அல்லது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.