7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 மக்களவை தொகுதிகளில் 7வது மற்றும் இறுதிகட்டதேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்ததை அடுத்து ஜூன் ஒன்றாம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பில் தலா 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடி, இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்புர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
7 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.