உத்தர பிரதேச மாநிலம் புல்புர் தொகுதிக்கு உள்பட்ட படிலா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி ராகுலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் புறக்கணித்தனர்.
இரு தலைவர்களும் மேடையில் இருந்தபோது, இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் மேடையை நோக்கி அதிக அளவில் நகரத் தொடங்கினர். தடுத்த போலீஸாரையும் தள்ளிவிட்டு அவர்கள் முன்னேறியதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி இரு தலைவர்கள் கூறியதை தொண்டர்கள் கேட்காமல் தொடர்ந்து முன்னேறி வந்தனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த அகிலேஷ் யாதவ், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, மேடையில் இருந்து ஹெலிபேடை நோக்கி நடந்தார். அவரைத் தொடர்ந்து ராகுலும் செல்ல, இருவரும் ஹெலிகாப்டரில் ஏறிச் சென்றுவிட்டனர்.