தாம் இந்திய மக்களின் வேலைக்காரர், அதுவும் சாதாரண வேலைக்காரரல்ல, 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்காக 24 மணி நேரமும் உழைக்கும் வேலைக்காரர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீகாரின் சரன் நகரில் பரப்புரை மேற்கொண்ட அவர், 10 ஆண்டுகள் தனக்கு மக்கள் வழங்கிய வேலையை செவ்வனே நிறைவேற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத பணிகளை 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்து காட்டியதாக தெரிவித்துள்ள பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை மோடி அரசு சிறப்பாக வளர்ச்சி பெறச் செய்திருப்பதாக உலக நாடுகள் அனைத்தும் கூறுவதாகவும் கூறியுள்ளார்.