தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்த சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக வந்தால் தான் ஆந்திர மாநிலத்திற்கு முன்னேற்றம் ஏற்படும் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.