இந்திய பகுதிகளையும் தனது எல்லை போல சேர்த்து நேபாளம் உருவாக்கியுள்ள புதிய வரைபடம் ஏற்க முடியாதது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கட்டாக்கில் பேட்டியளித்த அவர், நேபாளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டில் புதிய வரைபடத்தை இடம் பெறச் செய்திருக்கும் முடிவு ஒரு தலைபட்சமானது என்றார்.
இது போன்று வரைபடங்களை உருவாக்கிக் கொள்வது உண்மை நிலவரத்தை மாற்றாது என்றும் அவர் தெரிவித்தார். உத்தரகாண்ட், உ.பி., பீகார், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமுடன் 1850 கிலோ மீட்டர் எல்லையை பகிரும் நேபாளம், இந்தியாவின் லிபு லேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய இடங்களை தனது நாட்டின் பகுதியாக புதிய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.