கனடாவில் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்பீந்தர் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் எவ்வித தொடர்பும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 3 பேரை கனடா போலீசார் நேற்று கைது செய்தனர்.
கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகிய 3 பேரும் எட்மண்டன், அல்பெர்ட்டாவில் வசித்து வந்ததாகவும், அங்கேயே கைது செய்யப்பட்டதாகவும் கனடா போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் மூன்று பேர் மீதும் முதல்நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறிய கனடா போலீசார், நிஜ்ஜார் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.