கர்நாடகாவின் கலபுர்கி தொகுதியில் தனது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணிக்கு பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது கட்சிக்கு வாக்களிக்காவிட்டாலும், தனது இறுதிச்சடங்கிற்கு வந்து விடுமாறு பேசியதைக் கேட்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜக எம்.பி. உமேஷ் ஜாதவை எதிர்த்து தொட்டாமணி போட்டியிடும் நிலையில், தனது மருமகனுக்கு வாக்களிக்காவிட்டாலும் கலபுர்கிக்கு தாம் ஆற்றிய பணிகளை நினைத்தாவது இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு கார்கே பேசினார்.