வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெறும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் 2-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இவற்றில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் சசிதரூர் களம் காணும் திருவனந்தபுரம் தொகுதிகளும் அடங்கும்.
மேலும் கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வெள்ளியன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.