கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் எல்லைப்பகுதிகளான வாளையாறு,வேலந்தாவளம், மேல்பாவி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சிறப்பு கால்நடை பராமரிப்பு துறை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என கண்காணித்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.