முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் 102 வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
கவுரவம் மிக்க பணியைத் துறந்து மக்களுக்கு நேரடி பணியாற்ற வந்ததை பாராட்டுவதாகவும் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக கருதுவதாகவும் அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, வேட்பாளர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள பிரதமர், கோடைக் காலத்தில் அனைவரும் உடல்நலனை பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க, மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதை வாழ்த்துவதாகவும் மோடி கூறியுள்ளார்.