பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் வெறும் டிரெய்லர் தான் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கியமான திட்டங்கள் இனி வரும் 5 ஆண்டுகளில் தான் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் மோசமான நிலையில் இருந்த நாடு, தற்போது வலுவானதாக மாறி இருக்கிறது என்பதை மக்களே கண்கூடாக பார்க்க முடியும் என்றார்.
மற்ற கட்சிகளைப் போல் வெறும் தேர்தல் அறிக்கைகளை பாஜக வெளியிடாமல் உறுதி மொழிபத்திரம் அளிக்க இருப்பதாக தெரிவித்த பிரதமர், 2019 ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார்.