புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
புதிய வரிகளை விதிக்காமல், மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.