வாரணாசியில் "பிணங்களின் ஹோலி" அல்லது "சாம்பலுடன் ஹோலி" எனப்படும் மசான் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகம் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில் திருச்சியை சேர்ந்த அகோரி ஒருவருக்கு மண்டை ஓடு மாலை அணிவித்து , வண்ணப் பொடிகள் தூவி ஊர்வலமாக அழைத்து வந்து வழிபாடு நடத்தினர்.