தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே போலீசில் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நரகட் பள்ளியை சேர்ந்த மாளவிகா கடந்த 2018ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படையில் பணிக்கு சேர எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், கண்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
இது தெரிந்தால் பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று கருதிய மாளவிகா, சங்கர்பள்ளி ரயில் நிலையத்தில் பணியில் இருப்பதாக கூறி அதற்காக போலீஸ் சீருடை, தொப்பி, பெல்ட், ஷூ உள்ளிட்டவற்றை வாங்கி அணிந்து கொண்டு நிஜ போலீசாகவே வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், மாளவிகாவுக்காக பார்க்கப்பட்ட வரன், அவரின் பணி குறித்து ரயில்வேயில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.