LCA Mark-1A போர் விமானங்களை இம்மாத இறுதிக்குள் இந்திய விமானப் படையில் இணைப்பதற்காக, பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உற்பத்திப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
83 LCA Mark-1A விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோட்டிக்ஸ் நிறுவனத்துடன் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்திய விமானப்படை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இவ்வகை விமானங்களின் தரையிறக்கும் சோதனையை ஏற்கனவே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் செய்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் மிக் ரக போர்விமானங்களுக்கு பதிலாக 97 இலகுரக விமானங்களை விமானப்படையில் இணைக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.