பீகாரில் பாஜகவுக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிராக் பாஸ்வானின் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான கட்சிக்கும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பசுபதி பாரஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் அணியுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது