மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நகைச்சுவை மற்றும் உருது கவிதையின் துணையோடு தேர்தல் ஆணையம் மீதான புகார்களுக்கு பதிலளித்தார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பற்றிய எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு உருது கவிதை பாணியில் அவர் பதிலளித்தார். அரைகுறை நம்பிக்கைகளுடன் எப்போதும் குறை சொல்கிறீர்கள்....உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்போது வாயே திறப்பதில்லை என்று அவர் கூறினார்.
தேர்தல் பத்திரங்கள் பட்டியலைக் குறித்து கருத்து தெரிவித்த அவர், வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் நன்கொடை கொடுத்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் ரகசியத் தன்மையையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.