திருப்பதி விமான நிலையத்தில், நாளை முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதிக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள், அங்குள்ள பிரத்யேக கவுண்டரில், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை, 500 ரூபாய் கட்டணம் என மொத்தம் 10,500 ரூபாய் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.