மக்களவைக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காங்கிரசின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு 50 பெயர்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முதல் பட்டியலில் 39 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ராகுல்காந்தி வயநாட்டிலும் சசிதரூர் திருவனந்தபுரத்திலும் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக ராஜஸ்தான், அஸ்ஸாம், குஜராத் உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன்பிரதேசத்தின் வேட்பாளர்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.