கர்நாடக மாநிலம் ஷிவமொகா பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
ட்ரோன் கேமரா மூலம் கரடி பதுங்கிய இடத்தை கண்டுபிடித்து அங்கிருந்து தப்பி செல்லாமல் இருக்க சுற்றிலும் வனத்துறையினர் வலை விரித்தனர்.
முதல் முறையாக சுடப்பட்டதில் மயக்க மருந்து ஊசி குறி தப்பிய நிலையில், இரண்டாவது முறை சரியாக கரடி மீது பாய்ந்ததில் அது மயக்கம் அடைந்தது.
பிடிபட்ட ஆண் கரடிக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.