வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியை சாடினார். வரும் ஐந்தாண்டுகளில் இந்தியா விரைவான வளர்ச்சியைக் காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் விவசாயிகளுக்காக நிதித் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், பயனாளிகளை சென்றடைவதற்குள் அவர்களிடம் இருந்து அந்தப் பணம் பறிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.