இமாச்சல் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பதை அடுத்து கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும், அரியானா காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹுடாவும் சிம்லா விரைந்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில சட்டப்பேரவையில் பா.ஜ.க. வலியுறுத்தியது.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.