கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளரை இடதுசாரிகள் அறிவித்ததால், கர்நாடகா அல்லது தெலுங்கானாவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிட ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறை அவர், வயநாடு தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி அன்னி ராஜா, வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராகுலை வேறு தொகுதியில் போட்டியிட இடதுசாரி கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.