இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடந்துவருகிறது.
வேதாளை சிங்கிவலை குச்சி மீன் பிடி கிராம கடல் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் உதவியுடன் தங்கத்தை தேடி வருகின்றனர்.
தங்கம் கிடைக்காததால், கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வட மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் ஸ்கூபா வீரர்களை கொண்டு தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.