உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆயிரம் பணி இடங்களுக்கு 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகப் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக 244 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.