வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் பேசிய அக்கட்சி மூத்த தலைவர் மணிஷ் திவாரி, 2021 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றபோது கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்றார்.
இதனிடையே, 23 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வலியுறுத்தி போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 24 வயது விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்ததை கண்டித்து கருப்பு தினம் அனுசரித்தனர்.
மேலும் மார்ச் 14 ஆம் தேதியன்று ராம்லீலா மைதானத்தில் மகாபஞ்சாயத்து நடத்த பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.