உத்தரப் பிரதேசமும் தமது வாரணாசி தொகுதியும் முன்னேறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.
வாரணாசியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர், வாரிசு அரசியலில் மூழ்கிப் போன ஒருவர் இளைஞர் சக்தியைக் கண்டு அச்சமடைந்து இருப்பதாக கூறியுள்ளார்.
தங்களை பாராட்டுபவர்களை மட்டுமே ராகுல் போன்றவர்களுக்கு பிடிக்கும் என்றும், ராமர் கோயில் திறக்கப்பட்ட பின் உத்தரப் பிரதேசத்தின் மீது கூடுதல் வெறுப்புடன் எதிர்க்கட்சியினர் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ராமர் மீது காங்கிரஸ் கட்சியினருக்கு இந்தளவுக்கு வெறுப்பு இருக்கும் என்று தாம் நினைத்தது கூட இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், தங்கள் குடும்பம் மற்றும் வாக்கு வங்கியைத் தாண்டி காங்கிரஸ் தலைமையால் வேறு எதையும் சிந்திக்க முடியாது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.