இந்தியா சீனா ராணுவ கமாண்டர்களிடையே 21 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று சுமுகமான முறையில் நடைபெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா எல்லையருகில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் மேலும் படைகளைக் குறைப்பது குறித்து எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
சீனா எல்லையில் குவித்துள்ள தனது படைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
படைகளை முழுவதுமாக குறைத்தால்தான் எல்லையில் அமைதி நீடிக்கும் என்றும் இருநாடுகளின் நல்லுறவு மேம்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.