வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
மீண்டும் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டம் இயற்றுவதற்கு முன்பு அதன் அனைத்து அம்சங்களையும் நன்றாக பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும் என்று ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.