கன்னியாகுமரி பறக்கிங்கால் பகுதியில் மயானத்துக்கு எதிரே இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் தங்கிப் படித்து வரும் இந்த குழந்தைகள் காப்பகத்தில் அவர்களின் பார்வையில் படும்படி நாள்தோறும் சடலங்கள் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதுமாக உள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே மாற்று இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அந்த இடம் நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு கூறினார்.