கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பிரதமர் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளார்.