துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்கள், உள்நாட்டு முனையம் வழியாக விசா சோதனையின்றி அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மும்பையில் தரையிறங்கிய விஸ்தரா விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் ஏறிய பயணிகளை ஓட்டுநர் கவனக்குறைவாக உள்நாட்டு முனையத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
உடமைகளுக்காக அவர்கள் காத்திருந்தபோது தவறு நடந்துள்ளதை கண்டுபிடித்த விமான நிலைய ஊழியர்கள், பயணிகளை வெளிநாட்டு முனையத்துக்கு அழைத்துச் சென்று, குடியேற்றத் துறை சோதனைக்கு உட்படுத்தினர். இது குறித்து விசாரணை நடத்த சிவில் விமான பாதுகாப்பு பணியகம் உத்தரவிட்டுள்ளது.