மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 2.78 லட்சம் கோடியும், ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு 2.13 லட்சம் கோடியும் உள்துறைக்கு 2.03 லட்சம் கோடியும், கிராமப்புற வளர்ச்சிக்கு 1.77 லட்சம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு 1.68 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு 1.27 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். தகவல் தொடர்புத் துறைக்கு பட்ஜெட்டில் 1.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.