பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிர் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி இரட்டிப்பு உள்ளிட்ட சில முக்கிய சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என நிதிச்சந்தை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மத்திய பிரதேச தேர்தலில் மகளிர் நிதியுதவித் திட்டம் அதிக வாக்குகளை பாரதிய ஜனதா கட்சிக்கு பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மகளிர் விவசாயிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தை 12 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக நீடிக்கும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீது லிட்டருக்கு 11 ரூபாயும் டீசலுக்கு 6 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன.
இதை அப்படியே மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தேசிய ஓய்வூதிய திட்டமான NPS முதலீட்டிற்கு வருமான வரிச் சலுகை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.