தொடர்ந்து ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்ற பெருமையை இரண்டாவது நபராக பெறுகிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதற்கு முன், நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்த, முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் மட்டுமே அந்த பெருமைக்குரியவர்.
அவரது சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்த இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசுதான் ஓராண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியும் என்பதால், ஓரளவு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடும் வாய்ப்பும் இருக்கிறது.