பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஐந்தாண்டு அரசின் இறுதியாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட், அடுத்த ஆண்டு மார்ச் வரைக்குமான அரசின் திட்டங்கள், செலவுகள், மக்கள் நல அறிவிப்புகளை கொண்டிருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், ஏப்ரல், மே மாதங்களுக்கான அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேரிடாமல் இருக்கவே, இந்த இரண்டு மாதங்களுக்கான செலவு மானியக் கோரிக்கையாக இடைக்கால பட்ஜெட் தாக்கலாவது மரபு.
புதிய அரசு பொறுப்பேற்றதும் ஜூன் முதல் அடுத்த மார்ச் மாதம் வரையான 10 மாதங்களுக்கு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.