மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட தர முடியாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள மமதா மால்டாவில் தொண்டர்களுக்கு இடையே பேசினார்.
அப்போது, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளிலும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய தயாராக இருந்ததாக தெரிவித்த அவர், கூடுதல் தொகுதிகள் கேட்டதால், காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டதாக கூறினார்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வலிமை திரிணாமுல் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளதாகவும், தாங்கள் இன்றி காங்கிரஸால் வெற்றிபெற முடியாது என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.