மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியமைக்காக மறைவுக்கு பின் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மா விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர்களான வைஜயந்தி மாலாவுக்கும், பத்மா சுப்பிரமணியத்திற்கும் பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் பத்மவிபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கொற்கை நாவலை எழுதிய ஜோ டி குரூஸுக்கும், தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் நாச்சியாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.